Wednesday 24 April 2013

தமிழ் மக்கள் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் அரசினால் அடக்கப்பட்டு வருகின்றது - அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் சிறீதரன் எம்பி


கிளிநொச்சிக்கு விஜயம் செய்த தெற்கு, மற்றும் மத்திய ஆசியாவிற்கான வெளிநாட்டு உத்தியோகத்தர் லெஸ்லீபி ரெயிலர் மற்றும் அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த குரூஸ் ஆகியோர் இன்று காலை 9.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்டப் பணிமனையான அறிவகத்துக்கு விஜயம் செய்து சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.
இச்சந்திப்பில் பா.உ. சி.சிறீதரன், மற்றும் கிளிநொச்சி  முல்லைத்தீவு மாவட்டங்களின் ஓய்வுநிலை கல்விப்பணிப்பாளர் த.குருகுலராஜா மற்றும் கட்சியின் மாவட்ட கிளைச்செயலாளர்  சு.பசுபதிப்பிள்ளை ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
கடந்த மாதம் அறிவகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், அதற்கு முன்னர்  வெடிபொருள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விடயங்களையும்  தூதரக அதிகாரிகள் கேட்டு அறிந்து கொண்டனர்.

தொடர்ந்து மக்களின் நிலைப்பாடு பற்றி வினாவுகையில்
“கிளிநொச்சியின் பரவிப்பாஞ்சான்,  இரணைதீவு, முல்லைத்தீவு ,கேப்பாப்புலவு, வலிகாமம் ஆகிய பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்தாது சுதேச மக்களான தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் இராணுவத்துக்கென ஒதுக்கப்படுவதையும்  வடமராட்சிக் கிழக்கில் 700 ஏக்கர் இராணுவத்துக்கென அபகரிப்பு செய்யப்பட்டதையும் மண்டைதீவில் 600ஏக்கர் நிலமும், கிளிநொச்சி உதிரவேங்கை வைரவர் ஆலயக்காணியும்  இவ்வாறாக தொடர்ந்தும் மக்களைப் பயமுறுத்தி  இராணுவத்தால் தமிழ் மக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாக” பா.உ சி.சிறீதரன் அமெரிக்க அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார்.

No comments:

Post a Comment