Wednesday 24 April 2013

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது! பாங்களாதேஷ்


இலங்கையின் உள்விவகாரப் பிரச்சினைகளில் வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என பாங்களாதேஷ் வெளிவிவகார செயலாளர் சஹிதுல் ஹக் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள பாங்களாதேஷ் வெளிவிவகார செயலாளர் மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கிடையில் நேற்றைய தினம் அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் மொஹமட் சுபியர் ராமன், பங்களாதேஷ் கடற்படை அமைச்சின் உதவி செயலாளர் நசீர் அரிப் மஹூமுத், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய அலுவல்கள் தொடர்பான பணிப்பாளர் தரிக் அரிபுல் இஸ்லாம் ஆகியோர் பங்களாதேஷ் சார்பில் இச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கை சார்பில் துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் நிர்மல கொத்தலாவல, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பங்களாதேஷ், இலங்கைக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என பாங்களாதேஷ் வெளிவிவகார செயலாளர் இச்சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment